சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் - 2026க்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை அறிக்கையை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று(14.04.2026) காலை வி.சி.க தலைமையகமான அம்பேத்கர் திடலில் வெளியிட்டார் எழுச்சித்தமிழர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தக் கொள்கை அறிக்கையில் கீழ்க்கண்ட 12 உறுதிமொழிகளை மக்கள்முன் வைக்கிறது:
1. இருமொழிக்கொள்கை!
2. கடலும் காடும் கனிமமும் நமதே!
3. விலையில்லாக் கல்வியைப் பெறுவோம்!
4. அடிப்படை உரிமையாய் மருத்துவத்தை ஆக்குவோம்!
5. மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு!
6. மகளிருக்கு 50 விழுக்காடு!
7. தனியார்துறையிலும் சமூகநீதி!
8. உழுபவருக்கே நிலம்; இருப்பவருக்கே இடம்!
9. சிறுபான்மையினரைக் காக்க சிறப்புச்சட்டம்!
10.காவல்துறையும் சிறைத்துறையும் சீர்திருத்தப்பட வேண்டும்
11.மது, போதைப் பொருட்களை ஒழிப்போம்!
12.ஆணவக்கொலைகளைத் தடுத்திட சிறப்புச்சட்டம் இயற்றிடச் செய்வோம்!